42 பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டன

கோலாலம்பூர், ஏப்ரல் 09-

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மேற்கொண்ட 2024 ஆம் ஆண்டு ஓப்ஸ் ஹரி ராயா ஐடில்பித்ரி திடீர் சோதனையில் மொத்தம் 42 பேருந்துகள் தொழில்நுட்ப கோளாறின் காரணமாக சாலையில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

54 பேருந்து நிலையங்கள் உட்பட 28 டெர்மினல் ஆகிய இடங்களில் 3,799 பேருந்துகள் சோதனையிடப்பட்டதாக சாலை போக்குவரத்துத்துறையின் மூத்த அமலாக்க இயக்குநர் லோக்மான் ஜமான் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட 42 பேருந்துகளும் தொழில்நுட்ப கோளாறு காரணங்களினால் அவற்றை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்று லோக்மான் ஜமான் இன்று டெர்மினல் பெர்ஸெப்பாடு செலாத்தான்- னில் சோதனையிட்ட போது தெளிவுப்படுத்தினார்.

47 பேருந்து ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாதது, தொலைப்பேசி பயன்படுத்தி பேருந்து ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் சமான்கள் வழங்கப்பட்டதாக லோக்மான் ஜமான் அறிவித்தார்.

84 ஜேபிஜே அதிகாரிகள் ரகசியமாக பேருந்தில் சென்று ஆபத்தான முறையில் பேருந்துகளை ஓட்டுதல் மற்றும் 63 குற்றங்களை பதிவு செய்திருப்பதாக அவர் விளக்கினார். இச்சோதனை ஏப்ரல் 20 ஆம் தேதி வரையில் தொடரும் என்று லோக்மான் ஜமான் நினைவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்