மரணத்தை ஏற்படுத்தியதற்காக ஒப்பந்ததாரர் மீது குற்றச்சாட்டு

சுங்கை சிப்புட், ஏப்ரல் 09-

பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்தி, இரண்டு சகோதரர்களுக்கு மரணத்தை விளைவித்ததற்காக ஒப்பந்ததாரர் ஒருவர் மீது சுங்கை சிபுட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றச்சாட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 7.15 மணியளவில் ஜாலான் ஈப்போ-கோலா கங்சார்-ரிலுள்ள 38 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் 17 வயதுடைய அஹ்மத் ஸுஹால் நோராஜ்லான் மற்றும் 13 வயதுடைய அஹ்மத் மரிக்ஹ் நோராஜ்லான் ஆகியோருக்கு மரணம் விளைவிக்கும் வகையில் காரை செலுத்தி சென்றதற்காக அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் நூருல் ஆசிபா ரிட்சுவான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 52 வயதுடைய லீ கின் பெங் அக்குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50,000 வெள்ளி அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 41 (1) பிரிவின் கீழ் குற்றச்சாட்டப்படுவார் என்று கூறப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்