5 போலீஸ்காரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு

பெத்தாலிங் ஜெயா,பிப்.9
28 வயது தொழிற்சாலை ஊழியர் ஒருவரை மடக்கி, அவரின் வாகனத்தில் போதைப்பொருள் இருப்பதாக மிரட்டி, வங்கி ATM இயந்திரத்தில் 4,500 வெள்ளிப் பணத்தை மீட்கச்செல்லி, அப்பணத்தை பறித்து சென்றதாக MPV ரோந்து கார் பிரிவைச் சேர்ந்த ஐந்து போலீஸ்காரர்கள் இன்று புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். .

சர்ஜான் அந்தஸ்தில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி உட்பட ஐந்து போலீஸ்காரர்கள், மாஜிஸ்திரேட் நுருல் ரஷிடா முஹமாட் அகிட்முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

48 வயது ரொசைனி அபு ஹாஸ்ஸான், 35 வயது முஹமாட் முஸ்தாக்கிம் இஸ்மாயில், 24 வயது முஹமாட் ஷாகிர் ஹைக்கால் ஹஸ்லி , 38 வயது முஹமாட் நுரிசுவான் அஹ்மாட் சுஹைமி மற்றும் 30 வயது முஹமாட் குசைரி அஹ்மாட் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட அந்த 5 போலீஸ்காரர்கள் ஆவர்.

இவர்கள் அனைவரும் கடந்த பிப்ரவரி முதல் தேதி இரவு 10.15 மணியளவில் பினாங்கு, செபெராங் பெராய் தெங்ஙா, சிம்பாங் அம்பாட் நோக்கிச் செல்லும் ஜாலான் பெர்மாத்தாங் திங்கி என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த ஐந்து போலீஸ்காரக்ளும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்