முஸ்லிம்களுக்கு இன்று கருப்புத் தினமாகும்

கிளந்தான் மாநிலத்தில் ஷாரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டு வரும் 18 சட்ட விதிகளில் 16 சட்ட விதிகள், கூட்டரசு அரசிலமைப்பு சட்டத்திற்கு முரணானவை என்று புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பானது, இஸ்லாத்திற்கும், , நாட்டிற்கும் கறுப்பு வரலாறாகும் என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹாஸ்ஸான் வர்ணித்துள்ளார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, இதர மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் ஷாரியாசட்டத்திற்கும் ஆபத்தாகும் என்று முன்னாள் அமைச்சரான தக்கியுடின் ஹாஸ்ஸான் குறிப்பிட்டார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. இன்றைய வெள்ளிக்கிழமை, ஒரு கருப்பு தினமாகும் என்று அந்த பாஸ் தலைவர் கூறுகிறார்.

தகாத உறவு, சூதாட்டம், ஓரினப்புணர்ச்சி, பாலியல் தொல்லை போன்ற பல்வேறு குற்றச்செயல்களுக்கு கிளந்தான் மாநிலத்தில் ஷாரியாகுற்றவியல் சட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டு வரும் 18 சட்ட விதிகளும் சட்டவிரோதமானவை என்று அறிவிக்கக்கோரி, இரு முஸ்லிம் பெண்கள் தொடுத்துள்ள வழக்கில் 16 சட்டவிதிகள் சட்டவிரோதமானவை என்று கூட்டரசு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்