50 விழுக்காடு அபராத கழிவு சாலைப் போக்குவரத்து துறை (ஜேபிஜே) வழங்கவில்லை – மடானி அரசாங்கத்தின் செயலகம் அறிவிப்பு

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) சாலை குற்றங்களுக்காக எந்தவொரு சிறப்பு கழிவும் வழங்கவில்லை என்பதை மடானி அரசாங்கத்தின் செயலகம் தெளிவாக குறிப்பிட்டிருந்தது.

சாலை குற்றங்களுக்கான காவல் துறையின் அபராதங்களுக்கு மட்டுமே மலேசிய போலீஸ் படை 50 விழுக்காடு சிறப்புக் கழிவு வழங்கப்படும் எனத் திட்டமிட்டிருந்த போது சில ஊடகங்கள் அந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொண்டு வெளியிட்டிருந்த செய்தியினை தொடந்து இத்தகவல் வெளியிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய ஓட்டுநர் உரிமத்தை புதுபித்தல், தொழிற்கல்வி ஓட்டுநர் உரிமத்தை புதுபித்தல், தனியார் அல்லது வணிக மோட்டார் வாகன உரிமம் புதுபித்தல், குறிப்பிட்ட சமான்களை செலுத்துதல் போன்றவைக்கு மட்டுமே ஜே.பி.ஜே சேவை வழங்கவுள்ளது.

அபராதம் செலுத்த விரும்பும் பொதுமக்கள் முன்பாகவே பி.டி.ஆர்.எம் இன் MyPay Portal -லில் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகின்றது. இதுக்குறித்து போலி செய்தி எதுவும் பரப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்