6 மாத குழந்தையை பாதுகாவலருக்கு ஜாமின் மறுப்பு

பாங்கி, ஏப்ரல் 19-

சிலாங்கூர், ஹுலு லங்காட்,பேரனாங்கிலுள்ள அடுக்ககத்தில், பிறந்து 6 மாதமே நிரம்பிய ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொன்றது தொடர்பில், அதன் தந்தை இன்று பாங்கி மாஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மஜிஸ்ட்ரெட் நூர்தியானா முகமது நவாவி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, பாதுகாவலரான 25 வயதுடைய முகமது ஐசத் சமீன் எனும் அவ்வாடவர் தன் மீதான குற்றச்சாட்டு புரிவதாக தலையசைத்தார்.

கொலை வழக்குகள் உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால், அவரிடமிருந்து வாக்குமூலம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த 14ஆம் தேதி இரவு மணி 8 முதல் மறுநாள் காலை மணி 7.40 வரைக்குமான இடைப்பட்ட காலத்தில், அவர் அக்குற்றத்தை புரிந்ததாக, குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட போது, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதணையில் அவர் சயாபு வகை போதைப்பொருளை உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

அவருக்கு ஜாமின் வழங்க மறுத்த முகமது ஐசத், உயிரிழந்த குழந்தை மீதான உடற்கூறு ஆய்வறிக்கை, இரசாயனம் மற்றும் தடயவியல் அறிக்கைகள் முதலானவை கிடைப்பதற்கு ஏதுவாக, வழக்கின் மறுசெவிமடுப்பை மே 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்