60 லட்சம் வெள்ளி இழப்பீடு கோரும் McDonald’s Malaysia

காசா மீது இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து அதன் எதிரொலியாக ம்லேசியாவில் சில முதன்மை பிராண்டுகளின் தயாரிப்புகள் புறக்கணிக்கப்பட்டன. அதன் விளைவாக நாட்டில் செயல்பட்டு வரும் மிகப் பெரிய துரித உணவகங்களில் ஒன்றான McDonald’s Malaysia 60 லட்ச வெள்ளியை இழப்பீடாகக் கோரி இருக்கிறது.

மலேசியாவில் McDonald’s உணவகத்தின் உரிமத்தைக் கொண்டிருக்கும் Gerbang Alaf Restaurants Sdn Bhd (GAR) இது குறித்து தெரிவிக்கயில், தங்களின் வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்திற்காக 30 லட்ச வெள்ளியும், பணி நிறுத்தம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 15 லட்சம் வெள்ளி, காலாவதியானப் பொருட்களுக்காக 15 லட்சம் வெள்ளியும் கோர இருப்பதாகத் தெரிவித்தது.

இஸ்ரேல் – பாலஸ்தின் விவகாரம் தொடர்பில், McDonald’s பிராண்டை வெறுக்க வேண்டும் என மக்களைத் தூண்டியுள்ளது Boycott Divestment Sanctions Malaysia (BDS Malaysia) எனும் தரப்பு. மேலும், அவ்வமைப்பு வெளியிட்ட அத்தனை அவதூறானக் கூற்றுகளையும் மீட்டுக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் Gerbang Alaf Restaurants கேட்டுக் கொண்டுள்ளது.

பாலஸ்தீனில் 23 லட்சம் மக்கள் கொள்ளப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவனம் இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டிருப்பதாகவும் BDS Malaysia கூறி இருந்ததையும் Gerbang Alaf Restaurants குறிப்பிட்டது.

Gerbang Alaf Restaurants மட்டும் இல்லாமல், McDonald’s Corporation நிறுவனமும் உலகளாவிய நிலையில் எந்தவொரு மத, அரசியல் விவகாரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. இவ்வாறானச் சூழலில் BDS MALAYSIAவின் அவதூறு அந்நிறுவனத்தாரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளது என்பதால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், Gerbang Alaf Restaurants நிறுவனத்தின் அனைத்துக் குற்றச் சாட்டுகளையும் BDS Malaysia மறுத்துள்ளது. எனவே இவ்விவகாரத்தில் நீதிமன்றமே இறுதித் தீர்ர்ப்பை வழங்கட்டும் என BDS Malaysia குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்