இன்னும் எத்தனை காலத்திற்கு டிஏபி சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கொண்டு அரசியல் நடத்தும் ?

பல்லினம் மக்கள் கொண்ட மலேசியத் திருநாட்டில் தேசிய முன்னணியைப் போல் டிஏபி கட்சி ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மசீச இளைஞர் அணியின் தகவல் பிரிவு தலைவர் நியோவ் சூ சியோங் தெரிவித்துள்ளார். எனவே மசீச வை முன்னுதாரணமாகக் கொண்டு யார் மனமும் புண்படாதபடி டிஏபி நடந்து கொள்ள வேண்டும் என நியோவ் சூ சியோங் கூறினார்.

மக்களின் நலனுக்காக, இது வரை தேசிய முன்னணி அரசாங்கத்தால் கட்டி எழுப்பப்பட்ட நாட்டின் ஒற்றுமை காக்கப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய விவகாரங்களை அவ்வப்போது எழுப்பும் நடவடிக்கையை டிஏபி நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தில், குறிப்பாக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் டி ஏ பி, சரியான தளத்தில் முக்கியமான விவகாரங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என நியோவ் சூ சியோங் சுட்டிக் காட்டினார்.

முன்னதாக, இஸ்லாமிய சட்டங்களை இயற்றுவதற்கான மாநில சட்டமன்றத்தின் திறனை மதிப்பாய்வு செய்வதற்கான சிறப்புக் குழுவல் முஸ்லீம் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த நிபுணர்களை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்று Beruas நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙோ கோ ஹம் பரிந்துரைத்து இருந்தார். அந்த பரிந்துரை குறித்து அம்னோ மற்றும் எதிர்க்கட்சி இடம் இருந்து பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்