700 மில்லியன் வெள்ளி நிதி கையாடல் குறித்து போலீஸ் புகார்

கடந்த 2020 முதல் 2022 வரையில் ஆட்சி செய்து வந்த முந்தைய 2 அரசாங்கங்களின் திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 700 மில்லியப் வெள்ளி முறைகேடு நடந்துள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அளித்த வங்சா மாஜூ போலிஸ் தலைவர் Superintenden Ashari Abu Samah குறிப்பிடுகயில், அந்தப் புகார் கிடைத்திருப்பதை உறுதிப்படுத்தி, நிதியமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரை அழைத்து விசாரணை நடத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் அவ்விவகாரம் குறித்து ஸ்தாப்பாக் காவல் நிலையத்தில் மதியம் 2.00 மணி அளவில், அம்னோவின் தொடர்பு பிரிவு இயக்குநர் டத்தோ லோக்மான் நூர் அடாம் புகார் அளித்துள்ளார்.

முறைகேடலுக்கு உட்பட்ட நிதி மிகப் பெரியத் தொகை. மக்களின் பணமான 700 மில்லியன் வெள்ளி எங்கு சென்றது என்பது நமக்குத் தெரிய வேண்டும் எனவும் முன்னாள் பிரதமரின் சிறப்பு அதிகாரியின் ஈடுபாடு இதில் இருப்பதாகக் கூறப்படுவது எந்தளவுக்கு உண்மை என்பதும் விசாரணையில் தெரிய வர வேண்டும் என லோக்மான் சொன்னார்.

காவல் துறை மட்டும் இன்று மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையமும் தனது விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும் லோக்மான் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்