அறிக்கைக்காக காத்திருக்கிறோம்

பஃபர் ஃபீஷ் எனப்படும் ஊது மீனை உண்டப் பின்னர், உடலில் நச்சுக் கலந்து உயிரிழந்த ஜொகூர், ஸ்கூடாய்யைச் சேர்ந்த வயோதிக தம்பதியரின் மரணம் தொடர்பில் ஆய்வுக்கூட அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக ஜொகூர் மாநில சுகாதார ஆட்சிக் குழு உறுப்பினர் லிங் தியான் சுன் தெரிவித்தார்.

இத்தம்பதியரின் மரணம் தொடர்பான அறிக்கை இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லிங் தியான் சுன் குறிப்பிட்டார்.

விஷத்தன்மைக் கொண்ட ஊது மீனை விற்பனைச் செய்வதற்கு நடப்புச் சட்டம் தடை விதித்த போதிலும், அத்தம்பதியருக்கு எவ்வாறு நச்சு மீன் விநியோகிக்கப்பட்டது, அதனை விநியோகித்தவர் யார்? முதலிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS