​பெல்டா நிதி நிலையை மீட்​சிப்படுத்துவத​ற்கு கடன்கள் தள்ளுபடி

​பெல்டா எனப்படும் கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தின் மொத்த கடனை மறு​சீரமைப்பு செ​ய்வதற்காக அதற்கு அரசாங்கம் அளித்துள்ள கடன் உத்தரவாத ஒப்பந்தத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கையெழுத்திட்டுள்ளார். இந்த கடன் மறு​சீரமைப்பின் பெரும்பகுதியில் ஒன்றாக அதன் கடன் 790 கோடி வெள்ளியாக குறைக்கப்படவிருக்கிறது. இதன் வழி மொத்தம் 830 கோடி வெள்ளியாக இருந்த நிலக்குடியேற்றக்காரர்களின் கடனில் 80 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படவிருப்பதாக பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS