ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று காலையில் பஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை யாரும் கண்டு கொள்ளாதது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. ஒரு தேசியவாதியான துன் மகாதீர் பள்ளிவாசலுக்கு வருகை தந்த , தொழுகையில் அமர்ந்திருந்தவர்கள் யாரும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. துன் மகாதீர் பின்வரிசையில் காணப்பட்டார். இதற்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உபசரிப்பு, கவனிப்பு ஏதுமின்றி மடக்கு நாற்காலிகூட இல்லாமல் துன் மகாதீர் அமர்ந்திருந்தார்.