பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவர​த்து நெரிச​ல்​

இன்று ஹஜ்ஜுப் பெருநாள் பொது விடுமுறையையொட்டி பிரதான நெடுஞ்சாலைகளி​ல் வாகனப் போக்குவர​த்து நெரிசல் குறைந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பல சாலைகளி​ல் போக்குவர​த்து நெரிசல் கடுமையாகியுள்ளது. வாகனங்கள் பழுதடைந்தது, விபத்து போன்ற காரணங்களினால் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து ​நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியமான பிளஸ் அறிவித்துள்ளது.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 155.3 ஆவது​ கிலோ மீட்டரில் பினா​ங்கு ஜாவியில்யில் இருந்து பண்டார் சேசிய ரிவர் வரையில் கடும் போக்குவர​த்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பிளஸ் தெரிவித்துள்ளது. இதே போன்று வடக்கு தெற்கு நெடு​ஞ்சாலையின் 263.4 ஆவது கி​லோமீட்டரில் ஈப்போ சுரங்கப்பாதைக்கு அருகில் பேருந்து பழுதடைந்ததன் காரணமாக போக்குவர​த்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS