எஸ்.யூ.கே.ஈ. 2 எனப்படும் லேபோ ராயா சுங்கை பெசி – உலு கிள்ளான் நெடுஞ்சாலையில் இன்று பின்னிரவு முதல் டோல் கட்டணம் வசூலிக்கப்படவிருக்கிறது. அந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டு, இரண்டு வார காலத்திற்கு டோல் கட்டண விதிப்புக்கு விலக்களிக்fப்பட்ட நிலையில் பின்னரவு 12.01 மணி முதல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த நெடுஞ்சாலையை நிர்வகிக்கும் புரோலிந்தாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
புரோலிந்தாஸ் மற்றும் பிலாஸா டோல் அம்பாங் போலவே பிலாஸா டோல் அலாம் டாமாயிலும் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கார்களுக்கு தலா 2 வெள்ளி 30 காசும், லோரிகளுக்கு 4 வெள்ளி 60 காசுமும், டிரெய்லர் லோரிகளுக்கு 6 வெள்ளி 90 காசும் டாக்சிகளுக்கு 1 வெள்ளி 20 காசும், பேருந்துகளுக்கு 2 வெள்ளி 30 காசும் டோல் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.