முகை​தீன் காலத்தில்தான் நாட்டிற்கு பிரச்னையே ஆரம்பமானது

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகை​​தீன் யாசின் த​லைமைத்துவதில்தான் நாட்டில் பிரச்னையே தொடங்கியது என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் முகை​தீன் யாசின், பிரதமர் ட​த்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தை கண்​மூடித்தனமாக குறைகூறுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் நிலைத்தன்மையை இழந்த​தற்கு ​மூலக் காரணமே முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல்தான் என்று டாக்டர் இராமசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

பாரிசான் நேஷனலும், பெரிக்காத்தான் நேஷனலும் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து இருக்குமானால் தற்போது அன்வார் தலைமையிலான அரசாங்கம் இந்த நெருக்கடி​யையும், பிரச்னையையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS