தாம் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் கைப்பாவை என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும், மூடா கட்சியின் தலைவருமான சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மறுத்துள்ளார்.
தாம் யாருடைய கைப்பாவையும் அல்ல என்றும், இது தொடர்பாக தாம் மக்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே பதிலளிக்க விரும்புவதாகவும் நேற்று வியாழக்கிழமை தமது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களாகியும், அமைச்சரவையில் சொத்துக்கள் குறித்து விளக்கம் அளிக்காதது தொடர்பாக, தாம் கேள்வி எழுப்பிய போது, அவர்களால் அதற்கு பதில் அளிக்க முடியாத நிலையில், பிறரின் கைப்பாவை என்ற லேபிள்களின் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்பியதாக சையிட் சாடிக் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர்களிடையே முறைகேடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க சொத்துப் பத்திரப்பதிவு என்பது ஒரு நல்ல வழியாகும். இருப்பினும், இந்த விஷயத்திற்கு நெட்டிசன்களிடமிருந்து சில எதிர்மறையான பதில்கள் கிடைத்தது மட்டுமின்றி, டாக்டர் மகாதீரின் அறிவுறுத்தலின் காரணமாக தாம் இதனை செய்ததாக கூறியிருப்பது முற்றிது தவறானதாக என்று சையிட் சாடிக் தெரிவித்தார்.