வீட்டின் கூரையிலிருந்து ஒரு முதியவரின் சடலம் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது.
நேற்று நன்பகல் 12.38 மணியளவில், ஜொகூர், செகாமாட், பெகான் ஜாபி, ஜாலான் பூலோ காசாபில் உள்ள ஒரு வீட்டின் கூரையிலிருந்து 60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டதாக செகாமாட் மாவட்ட தீயணைப்பு, மீட்புத் துறையின் அதிகாரி முகமட் ஹஸிம் அப்துல் ரசாக் தெரிவித்தார்.
தமது தாயின் வீட்டின் கூரையைச் சீர் செய்துக் கொண்டிருந்த போது தீடீரென்று விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக முகமட் ஹஸிம் குறிப்பிட்டார்.