கோலாலம்பூர், செராஸ், கவாசான் பெரின்டாஸ்திரியான் புடிமான் தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிற்சாலைகள் எரிந்து நாசமடைந்தன.
இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமட் ரஸாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதிகாலை 2.15 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வண்டிகளுடன் அவ்விடத்திற்கு விரைந்த 48 வீரர்கள், தீயணை அனைக்கும் முயற்சியில் முழு வீச்சில் ஈடுப்பட்டனர்.
அதிகாலை 4.37 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் வான் முகமட் ரஸாலி குறிப்பிட்டார்.