வரும் பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலாான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி புறக்கணிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் மாநில வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
பினாங்கு மக்களின் நல்வாழ்வுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக நல்லாட்சியை வழங்கி வரும் நடப்பு அரசாங்கத்திற்கு மக்கள் தொடர்ந்து தங்கள் பிளவுப்படாத ஆதரவை வழங்க வேண்டும் என்று ஜசெக தலைவருமான லிம் குவான் எங் வலியுறுத்தினார்.