திரெங்கானு, கெமாமான், கம்போங் ஆயிர் புத்தெஹ், ஜெராம் ஆயிர் புத்தெஹ் என்ற நீர் வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்த போது, மலை முகட்டிலிருந்து திடிரென்று பாய்ந்த கடும் நீரோட்டத்தினால் அடித்துச்செல்லப்பட்ட 10 பேரில் மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.45 மணியளவில் உள்ளூர் மக்களால் அந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. இத்தடன் நீரில் மூழ்கியவர்களின் எழுவரின் சடலங்கள் மீட்கப்பட்ட வேளையில் மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் பத்து பேர் நீரில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆகக்கடைசியாக இன்று மீட்கப்பட்ட நபரின் சடலம், சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எஞ்சியவர்களை மீட்பதற்கு தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.