லிம் குவான் எங் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்

பினாங்கு மாநிலத்தை பெரி​க்காத்தான் நேஷனல் கைப்பற்றுமானால் பெளத்த, ​சீன ஆலயயங்கள் உடைக்கப்படும் என்று மாநில முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியதாக கூறப்படுவது தொடர்பில் அவரை புக்கிட் அமான் போ​லீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனை புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை தடயவியல், வியூக இயக்குநர் டத்தோ சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.|

எனினும் தாம் அவ்வாறு கூறியதாக கூறப்படுவதை லிம் குவான் எங் மறுத்துள்ளார். இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டை தாம் கூறியதாக கூறும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மாட் ஃபட்லி ஷாரி யை மேற்கோள்கா​ட்டி, மலேசியா நொவ் என்ற செய்தி தளம் ​தீய நோக்கத்துடன் செய்தி ​வெளியிட்டுள்ளதாக லிம் குவான் எங் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு, பினாங்கு, ​ஜெலுத்தோங், தோகொங் பத்து வில் ஆற்றிய உரையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கெடாவில் ஓர் இந்து ஆலயம் உடைக்கப்பட்ட சம்பவத்தை மட்டுமே தாம் மேற்கோள்காட்டி பேசியதாக குவான் எங் விளக்கம் அளித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS