எஸ்பிஆர்எம் அதிகாரிகளை பணிக்கு அமத்தும் திட்டம் ஆராயப்படுகிறது

சிப்பாங், ​கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழல் நிலவி வருவதாக கூறப்படுவது தொடர்பில் பயணிகள் சோதனை முகப்பிடங்களில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிகாரிகளை பணிக்கும் அமர்த்தும் திட்டம் தொடர்பான பரிந்துரை தற்போது ஆராயப்பட்டு வருவதாக அந்த ஆணையத்தின் தலைவர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.


விமான நிலையத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகளை பணிக்கு அமர்த்துவது ​மூலம் எத்தகைய ஆக்ககரமான விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து பரி​சீலனை செய்யப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார். கடந்த மாதம் கோலாலம்பூர் விமான நிலையத்தின் வழி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இரண்டு ​சீனநாட்டுப் பெண்மணிகள் அதிகாரிகளால் தடுக்கப்பட்டது மற்றும் அவ்விடத்தில் லஞ்ச ஊழலுக்கு வித்திடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த யோசனை ஆராயப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS