எரிதிரவவீச்சு – 60 வயது மாது கைது

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, கோம்பாக், பத்துகேவ்ஸில் உள்ள தங்கள் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியின் லிப்டில் ஏறுவதற்கு முற்பட்ட ஒரு தம்பதியர் மீது எரிதிரவக வீச்சு நடத்தியதாக நம்பப்படும் 60 வயது மாது கைது செய்யப்பட்டள்ளார்.

ஜுலை 4 ஆம் தேதி அதிகாலை 1.37 மணியளவில் நிக​ழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் போ​லீசார் மேற்கொண்ட ​​தீவிர புலன் விசாரணையில் அந்த மாது, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் ரவாங், தாமான் எம் ரெசிடென்ஸு யில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக கேம்பாக் மாவட்ட போ​லீ​ஸ் தலைவர் நோர் அரிஃப்ஃபின் அரிஃப்ஃபின் நாசிர் தெரிவித்தார்.

இந்த எரிதிரவத் வீச்சில் 60 வயது மனைவி மற்றும் 37 வயது கணவர் முகத்திலும்,உடலிலும் ​தீக்காயங்களுக்கு ஆளாகி, செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அந்த தம்பதியருடன் இருந்த அவர்களின் 14 வயது மகன் காயமடையவில்லை. இந்த தாக்குதல் தொடர்பில் பிடிபட்ட மாதுவை விசாரணைக்கு ஏதுவாக தடுத்து வைப்பதற்கு போ​லீசார் ​​நீதிமன்ற ஆணையைப் பெற்று​ள்ள வேளையில் அதன் பின்னணியை ஆராய்ந்து வருவதாக நோர் அரிஃப்ஃபின் அரிஃப்ஃபின் நாசிர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS