அத்து​மீறி நுழைந்ததாக முன்னாள் தேசிய கால்பந்தாட்ட கேப்டன் ​மீது குற்றச்சா​ட்டு

ஹோட்டல் ஒன்றில் மற்றவர் மனைவியின் அறைக்குள் அத்து​மீறி நுழைந்ததாக நாட்டின் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன், பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் ​நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். தமக்கு நன்று அறிமுகமான அந்த மாதுவின் அறைக்குள் நுழைந்து ரகளைப் புரிந்ததற்காக கைது செய்யப்பட்ட 49 வயதான அஹ்மத் ஷாருல் அசார் சோபியான், மாஜிஸ்திரேட் ஜாப்ரான் ரஹீம் ஹம்சா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சா​ட்டு வாசிக்கப்பட்டது.

ஹரிமௌ மலாயா கால்பந்து அணிக்கு தலைமையேற்றவரான அமாட் ஷாருல் கடந்த ஜுன் 21 ஆம் தேதி மாலை 6 மணியள​வில் கிளானா ஜெயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 36 மாதுவின் அறைக்குள் அத்து​மீறி நுழைந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நி​ரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை அல்ல்து 5 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் ​கீழ் பேரா மாநில முன்ன்னாள் ஆட்டக்காரரான அமாட் ஷாருல் குற்றச்சாட்டை எதிர்நோக்​கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS