வழக்கறிஞர் சட்ட உதவியை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள ஏழை மக்கள், இலவச சட்ட உதவியை பெறுவதற்கு தேசிய சட்ட உதவி அறவாரியம் வாயிலாக ஒரு கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியுள்தாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள ஏழை மக்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு ஒரு வழக்கறிஞரை நியமித்துக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருவதை கண்கூடாக காண முடிகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் தேசிய சட்ட உதவி அறவாரியத்திற்கு ஒரு கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் சிறுசிறு குற்றங்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ஏழை மக்கள், வழக்கறிஞரை நியமித்துக்கொள்ள முடியாமல் அவர்களின் வழக்குகள் அடிக்கடி ஒத்திவைக்கும் நிலை ஏற்படாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.