எரிபொருள் விற்பனை லைசென்ஸின்றி, 2,800 லிட்டர் டீசல் எண்ணெய்யை வைத்திருந்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 15 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
இ. நாகராஜன் என்ற 25 வயதுடைய அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி மஸ்னி நவி, இந்த அபராதத் தொகையை விதித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் போர்ட்டிக்சன், ஜாலான் பந்த்தாய், எண்ணெய் நிலையத்தில் நாகராஜன் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.