தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் மேல்முறையீடு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சுபாங் ஜெயா, சீபீல்டு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் ஆயுதம் தாங்கிய கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிரான வழக்கில் அவர்களை விடுதலை செய்து இருக்கும் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

அந்த 17 பேரும் எதிர்வாதம் புரிய அழைக்கப்படாமலேயே விடுவிடுக்கப்பட்டதை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு கடந்த வாரம் மேல்முறையீடு செய்து இருப்பது குறித்து தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் அஸ்லான் அப்துல் ரோனி தெரிவித்துள்ளார்.

17 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 17 பேரும் ஆயுதங்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்தனர் என்பதை ஆதராப்பூர்வமாக நிரூபிக்க பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக கூறி, அனைவரையும் கடந்த ஜுன் 27 ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்தது.

WATCH OUR LATEST NEWS