அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

25 ஆயிரம் வெள்ளி லஞ்சம் வாங்கியதாக கூட்டரசு முன்னாள் அமைச்சர் ஒருவரின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி. ஆர்.எம் கைது செய்துள்ளது. குடியுரிமை விண்ணப்பம் ஒன்றை அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி ஆடவர் ஒருவரிடமிருந்து லஞ்சப் பணத்தை பெற்றதாக 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை எஸ்.பி. ஆர்.எம் அதிகாரிகள் வளைத்துப் பிடித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம்ஆண்டில் அமைச்சர் பதவி வகித்த ஒருவருக்கு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் சம்பந்தப்பட்ட நபர் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக எஸ்.பி. ஆர்.எம் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபரை வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை எஸ்.பி. ஆர்.எம் பெற்றுள்ளது.

WATCH OUR LATEST NEWS