அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடவிருக்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மொத்தம் 235 தொகுதிகளில் கிட்டத்தட்ட 100 இடங்களில் பாரிசான் நேஷனல் போட்டியிடுவது உறுதியாகி விட்டதாக அம்னோ தலைவருமான ஜாஹிட் குறிப்பிட்டார். வேட்பாளர்களின் பெயர்கள் வரும் 21 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.