மஇகா முன்னாள் தேசியத் தலைவியும், முன்னாள் மேலவை உறுப்பினருமான டத்தின் படுக்கா ஜெயா பார்த்திபன் காலாமானார். அவருக்கு வயது 76. ஆர்.டி.எம்.யின் வானொலி பிரிவில் பணியாற்றிவரான ஜெயா குழந்தைவேலு என்ற இயற்பெயர் கொண்ட ஜெயாபார்த்திபன் சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 11.45 மணியளவில் கோலாலம்பூர், பந்தாய் மெடிக்கல் செண்டரில் தமது இறுதி மூச்சை விட்டார்.
மறைந்த ஜெயா பார்த்திபனுக்கு, மஇகா தலைமையகத்தில் நிர்வாகச் செயலாளராக முன்பு பணியாற்றிய பார்த்திபன் என்ற கணவரும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மஇகாவின் மகளிர் பிரிவுக்கு புதிய வழிகாட்டலையும், எழுச்சியையும் ஏற்படுத்துவதில் முக்கியப்பங்காற்றியவரான ஜெயா பார்த்திபன் மஇகாவின் மகளிர் பிரிவு ஆலோசகராகவும் சேவையாற்றி வந்துள்ளார். ஆர்.டி.எம்.மின் செய்தி பிரிவில் பணியாற்றிய வந்த பார்த்திபனை மணம் புரிந்த ஜெயபார்த்திபன், கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் திறமைக் கொண்டவரான ஜெயாபார்த்திபன், 1986 ஆம் ஆண்டு சலங்கை ஒலி எனும் தமிழ் மாத இதழின் ஆசிரியராக இருந்து அந்த மகளிர் இதழை சிறப்பாக வழிநடத்தி வந்தார். “சில நினைவுகள், சில கனவுகள்” என்ற நூல் உட்பட சில நூல்களையும் ஜெயா பார்த்திபன் எழுதியுள்ளார்.
அன்னாரது நல்லடக்க இறுதிச்சடங்கு இன்று ஜுலை 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் எண். 5, ஜாலான் 14/37 C,பெட்டாலிாங் ஜெயா,என்ற முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்ற வேளையில் ஒரு மணியளவில் அவரின் உடல் கம்போங் துங்கு மின் சுடலையில் தகனம் செய்யப்படவிருக்கிறது-