அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி 74 விழுக்காடு வாக்காளர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக டாருல் ஏசான் ஆய்வு மையம் கூறுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிர்வாகம் மீது 68.6 விழுக்காட்டினர் திருப்தி கொண்டுள்ளனர். அதிலும் சிலாங்கூரில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் பிரதமருக்கு 73. 4 விழுக்காடு ஆதரவு உள்ளதாக அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.