வர்த்தகர் டத்தோஸ்ரீ எஸ். ஞானராஜாவால் ஏமாற்றப்பட்டு விட்டதைத் உணர்ந்தப்பின்னரே நிறுவனத்தின் குத்தகையாளர், நடவடிக்கை எடுக்க வேண்டி கட்டாயத்திற்கு ஆளாகியதாக என்று பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத்திட்டம் மீதான லஞ்ச ஊழல் வழக்கில் சாட்சி ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.|
தங்கள் நிறுவனம் டத்தோஸ்ரீ ஞானராஜாவால் ஏமாற்றப்பட்டு விட்ட விவகாரத்தை இயக்குநர் வாரியக் கூட்டத்தில் தாமும், தமது சகப் பணியாளருமான சாருல் அஹ்மாட் முஹமாட் சுல்கிஃபியும் தெரிவித்ததாக கொன்செர்ஷம் செனித் பியுசிஜி எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான இப்ராஹிம் சாஹாரி தெரிவித்தார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தப்பின்னர் தாங்கள் வழங்கிய ஒரு கோடியே 90 லட்சம் வெள்ளியை திரும்ப ஒப்படைத்தும்படி டத்தோஸ்ரீ ஞானராஜாவை கேட்டுக்கொள்ளும் வழக்கறிஞர் நோட்டீஸ் வெளியிடப்பட்டதாக இப்ராஹிம் சாஹாரி குறிப்பிட்டார்.
அதேவேளையில் ஞானராஜாவும் சாருல் அஹ்மாட்டை ஏமாற்றியதாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராக நடைபெற்று வரும் பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத்திட்டம் மீதான லஞ்ச ஊழல் வழக்கில் சாட்சியம் அளிக்கையில் இப்ராஹிம் சஹாரி மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.