கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் மக்கள் நீதி கட்சியின் தொகுதித் தலைவர் தே லியான் ஓங்கிற்காக பொருளாதார அமைச்சர் முகமட் ரபிஸி ரம்லி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கவுள்ளார்.
பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் நடவடிக்கை மையம் திறப்பு விழாவிற்காக வருகை தரும் ரபிஸி ரம்லி, முதல் கட்டமாக கூலிம் வேட்பாளர் தே லியான் ஓங் மற்றும் லுனாஸ் சட்டமன்றத்தின் மக்கள் நீதி கட்சியின் வேட்பாளர் சம்சுல் அப்துல்லா ஆகியோருடன் இணைந்து தாமான் செலாசே வட்டாரத்திலுள்ள கடைகளில் தேர்தல் பிராச்சரத்தில் இறங்கவுள்ளார்.
அதன் பின்னர் பிற்பகல் 2.00 மணி அளவில் கூலிம் சட்டமன்ற வேட்பாளர் தே லியான் ஓங்கின் தேர்தல் நடவடிக்கை மையத்தின் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது. இதில் ரபிஸி ரம்லி கலந்து சிறப்பிக்கவிருக்கிறர். மேலும், இந்நிகழ்வில் மலேசிய மடானி, இதுவரை மக்களுக்காக வழங்கிய சலுகைகள், ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய விளக்க உரைகளும் இடம் பெறவிருக்கின்றன. தே லியான் ஓங்கின் தேர்தல் நடவடிக்கை மையம் கூலிம் துங்கு புத்ரா அருகாமையில் கடை வரிசைப் பகுதியில் வீற்றிருக்கிறது. இந்தத நிகழ்வில் சுற்று வட்டார மக்கள் அனைவரும் திரளாக வருகைத் தரும்படி கூலிம் சட்டமன்றத்திற்கு போட்டியிடும் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் தே லியான் ஓங் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இந்நிகழ்வில் மலேசிய மடானி, இதுவரை மக்களுக்காக வழங்கிய சலுகைகள், ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய விளக்க உரைகளும் இடம் பெறவிருக்கின்றன. தே லியான் ஓங்கின் தேர்தல் நடவடிக்கை மையம் கூலிம் துங்கு புத்ரா அருகாமையில் கடை வரிசைப் பகுதியில் வீற்றிருக்கிறது.