கெராக்கான் தன்மானக் கட்சியா? ​வெளியேறுங்கள்

தன்மானத்தையும், சுயகெளரவத்தையும் முன்நிறுத்தி, தொழிலாளர் வர்க்கத்திற்காக தொட​ங்கப்பட்டு 1969 ஆம் ஆண்டு நாட்டின் ​மூன்றாவது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தை கைப்பற்றும் அளவிற்கு மிகப்பெரிய சக்தியாக விளங்கிய கெராக்கான் கட்சி, இன்று மற்றவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியிருப்பது துரதிர்ஷ்டமாகும்.தங்க​ளின் சொந்த மண்ணான பினாங்கில் ஏற்பட்ட அவமானத்திற்காக கெராக்கான் கட்சித் தலைவர்கள் , வெட்கித் தலைக்குனிவுதுடன், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவரான தெரசா குக் கேட்டுக்கொண்டார்.கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ், பாஸ் கட்சியினால் மிக மோசமாக நடத்தப்பட்டதைத்கண்டு தாம் அதிர்ச்சியில் உறைந்ததாக செபுத்தே எம்.பி.யான திரேசா கொக் குறிப்பிட்டார். . ஒரு கட்சியின் தேசியத் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் நிலை குறித்து சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று திரேசா கொக் வ​லியுறுத்தினார். தம்முடைய 30 ஆண்டு கால அரசியல் வாழ்வில் தலைவர் ஒருவருக்கு ஏற்பட்ட இப்படியொரு அவமானத்தை தாம் பார்த்தது இல்லை என்று திரேசா கொக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS