பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் நெகிரி செம்பிலான், மாம்பாவ் வில் மாபெரும் தேர்தல் பரப்புரை, நாளை மறுநாள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7.01 மணிக்கு மம்பாவ், பாடாங் தாமான் திவ் ஜெயா வில் நடைபெறவிருக்கிறது. மம்பாவ் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு மூன்றாவது தவணையாக டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களம் இறங்கியுள்ள யாப் யூ வேங் கை ஆதரித்து நடைபெறும் இந்த தேர்தல் பரப்புரையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் உள்ள முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். நெகிரி செம்பிலன் மாநில டிஏபி யின் துணைச் செயலாளராக 5 ஆண்டுகளும், மாநில பொருளாளராக 10 ஆண்டுகளும் பொறுப்பில் இருந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் யாப் யூ வேங் கின் வெற்றியை உறுதி செய்வதற்கு நடைபெறும் இந்த மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.