பல்கலைக்கழகம் போன்ற அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் இனபாகுபாடுயின்றி பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கோட்டா முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று மூடா கட்சித் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான், அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். பி40 தரப்பை சேர்ந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களில்ர சேர்ப்பதில் இனப்பாகுபாடு காட்டப்படக்கூடாது. மாறாக, அவர்களுக்காக தனிக் கோட்டா முறை ஒதுக்கப்பட வேண்டும். இதன் மூலம் இதர மாணவர்களைப் போலவே பி40 தரப்பைச் சேர்ந்த மாணவர்களும் சமத்துவமான கல்வி வாய்ப்புகளை உயர்கல்விக்கூடங்களில் பெற முடியம் என்று சையிட் சாடிக் பரிந்துரைத்துள்ளார்.