இஸ்லாமியர் அல்லாதவர்கள் விவகாரப்பிரிவு உருவாக்கப்பட்டது

கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியை கைப்பற்றியப் பின்னர் இஸ்லாமியர் அல்லாதவர்கள் நலன் சார்ந்த விவகாரங்களை கவனிப்பதற்காக மாநில வரலாற்றில் முதல் முறையாக மாநில ஆட்சிக்குழுவில் இஸ்லாமியர் அல்லாதவர் விவகாரங்கள் என்று ஒரு பிரிவு உருவாக்கப்பட்டதாக அதற்கு பொறுப்பேற்ற ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக நான்காவது முறையாக போட்டியிடுபவருமான எஸ். வீரப்பன் தெரிவித்துள்ளார்.

தவிர சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களின் மானியத்தில் கோயில்கள் மற்றும் இதர வழிபாட்டுத்தலங்களுக்கு நிதி ஒதுக்கி வருகின்றனர் என்று குறிப்பிட்ட வீரப்பன், தமது ரெப்பா தொகுதியில் 4 கோயில்களுக்கு தொடர்ந்து மானியத்தை வழங்கி வருவதாக குறிப்பிட்டார். குறிப்பாக ஸ்ரீ சுந்தரவிநாயகர் ஆலயத்திற்கு 10 ஆயரம் வெள்ளியும், குட்டி பத்துகேவ்ஸ் என்று கூறப்படும் தாமான் இண்டாவில் உள்ள ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்திற்கு 10 ஆயிரம் வெள்ளியும், ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்திற்கு 5 ஆயிரம் வெள்ளியும், ரெப்பா தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தி​ற்கு 5 ஆயிரம் வெள்ளியும் மானியமாக தாம் வழங்கி இருப்பதாக தமது சேவையை பட்டியலிட்டார் வீரப்பன்.

WATCH OUR LATEST NEWS