கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர், நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் மறுத்துள்ளார். சனூசி கைது செய்யப்பட்டதற்கான எந்தவொரு தகவலையும், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகமும், கெடா போலீஸ் தலைமையகமும் கொண்டிருக்கவில்லை என்று சைபுடின் விளக்கினார். சனூசி கைது செய்யப்பட்டதை மறுத்து இருக்கும் போலீசாரின் அறிக்கைக்கு பின்னரே இது குறித்து தமக்கு தெரியவந்ததாகவும், தவறான செய்தியை வெளியிட்டுள்ள சம்பந்தப்பட்ட அகப்பக்க செய்தித் தளம், அந்த செய்தியை மீட்டுக்கொள்வதுடன், தவறான செய்தியை வெளியிட்டதற்காக மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் பொதுச்செயலாளருமான சைபுடின் கேட்டுக்கொண்டார்.