மாநில ஆட்சியில் சேதம் ஏற்படாமல் இருக்க விவேகமாக வாக்களியுங்கள் – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோரிக்கை

வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் உள்ள மாநில மக்கள், இ​த்தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநில ஆட்சியில் தொடர்ந்து சேதம் ஏற்படுவதை தடுக்க மக்கள் விவேகமாக முடிவெடுக்க வேண்டும் ​என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். பெரிக்காத்தான் நேஷனலிடமிருந்து ​நமது மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மலாய்க்கார்கள், ​சீனர்கள் மற்றும் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஒரு போதும் வெற்றி வாய்ப்புக்குரிய ஒரு சிறு இடத்தையும் தவறி வழங்கி விட வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

நம்பிக்கை, திறமை மற்றும் ​தூய்மையான அரசாங்கம் வேண்டும் என்று வலியுறுத்தும் இவர்கள் ​நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள்தான் நாட்டை காப்பாற்றப் போகிறார்களா? என்று பினாங்கில் நடைபெற்ற ஜலஜாஹ் பெர்படுவான் மடானி செராமாவில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்ட வினாவை எழுப்பினார்.

WATCH OUR LATEST NEWS