நெகிரி செம்பிலான் மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினராக எஸ். வீரப்பன் நியமிக்கப்பட்டிருந்தாலும் அரசியலில் தொடர்ந்து தம்மை அரவணைத்து மிளிரச் செய்து வரும் ரெப்பாஹ் சட்டமன்றத் தொகுதி மக்களை தம்முடைய மற்றொரு கண்ணாகவே கருதி வருகிறார் என்பதற்கு அத்தொகுதியில் அவர் வழங்கிய சேவைகளே சான்றாகும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக தம்பின் வட்டாரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தின் வளர்ச்சிக்கும், அதன் மேன்மைக்கும் வீரப்பன் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வந்துள்ளார்.
ரெப்பாஹ் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்தற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக நான்காவது முறையாக போட்டியிடும் தம்மை தொகுதி மக்கள் தொடந்து ஆதரித்து, வெற்றி பெறச்செய்வார்களேயானால் தொகுதியில் உள்ள ஆலயங்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தம்மால் உதவிட முடியும் என்று வீரப்பன் உறுதி கூறுகிறார்.