தாப்பவில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறையில் மாது ஒருவர் நுழைந்த போது, அவரை பின் தொடர்ந்து சென்று ஒளிந்திருந்து பார்த்த ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த கழிப்பறையில் யாருக்கோ காத்திருப்பதைப் போல் பாவனை செய்து, இந்த கைங்கரியத்தைப் புரிந்த நபர் தேடப்பட்டு வருவதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ செரி முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி தெரிவித்தார்.
சம்பவத்தன்று மாலை 4.00 மணியளவில் தாம் கழிப்பறையில் இருந்த போது, ஆடவர் ஒருவர் ஒளிந்திருந்து தம்மை பார்த்ததாக 35 வயது மாது போலீசில் புகார் செய்துள்ளார். அந்த ஆடவரின் பார்வையிலிருந்து தன்னை சுதாரித்துக்கொண்ட அந்த மாது, அவசர அவசரமாக கழிப்பறையிலிருந்து வெளியேறியுள்ளார். கழிப்பறைக்குள் நுழைந்த அந்த நபரும், பின்னர் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறி, கார் நிறுத்தம் இடத்தில் தொயோத்தா அவான்சா புறப்பட்டது.
எண்ணெய் நிலையத்தின் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர், பயன்படுத்திய காரின் பதிவு எண்ணை சோதனை செய்த போது, அக்கார், பத்துகாஜா அருகில் பூசிங்கில் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அந்த காரின் பதிவு எண்ணை அடிப்படையாக கொண்டு அந்த நபர் தற்போது தீவிரமாக தேடப்பட்ட வருவதாக முஹமாட் யுஸ்ரி குறிப்பிட்டார்.