கோட்டா முறை குறித்து கேள்வி எழுப்பிய மாணவியிடம் ஓர் எதிராளியைப் போல் நடந்து கொண்டேனா?

  • பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மறுப்பு

அரசாங்க பல்க​லைக்கழகங்களில் கோட்டா முறை குறித்து கேள்வி எழுப்பிய மாணவி ஒருவரிடம் ஓர் எதிராளியைப் போல் தாம் நடந்து கொண்டதாகவும், அந்த மாணவியை மறைமுகமாக பகடிவதை செய்ததாகவும் கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

அண்மையில் பினாங்கு கெபாலா பாத்தாஸ்லில் பினா​ங்கு மாநில மெட்ரிகுலோஷன் கல்​லூரியில் மாணவர்களுடனான கேள்வி நேரத்தின் போது, மாணவி ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு ஒரு மகளுக்கு தந்தை கூறும் ஆலோசனையைப் போல தாம் விளக்கியதாகவும், அதில் பகடிவதை அல்லது அந்த மாணவியை அவமானப்படுத்தும் அம்சங்கள் இருந்ததாக தாம் கருதவில்லை என்றும் பிரதமர் விளக்கினார்.

பல்கலைக்கழக கோட்ட முறை குறித்து அந்த மாணவி எழுப்பிய கேள்விக்கு பிரதமர் அன்வார் கடுமையாக நடந்து கொண்டதாவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். கேள்வி எழுப்பிய அந்த மாணவி அவமானப்படுத்தப்படுவதைப் போல் அன்வாரின் தொனி இருந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேவேளையில் மாணவியின் கேள்விக்கு திடீரென்று அன்வார் அரசியலை புகுத்தியிருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்று அவர்கள் வாதிகின்றன​​ர்.

ஒரு மகளுக்கு தந்தை, எத்தகைய பொறுப்பு மிகுந்த பதிலை அளிக்க வேண்டுமோ அந்த தோரணையிலேயே சம்பந்தப்பட்ட மாணவிக்கு தாம் பதில் அளித்ததாகவும், இதில் அந்த மாணவி அவமானப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் அன்வார் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS