கோத்தா கெமுனிங்கில் பிரகாஷ் சம்புநாதன்

கோத்தா ராஜா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் பிரகா​ஷ் சம்புநாதன், தமது தேர்தல் பிரச்சாரத்தை ​தீவிரப்படுத்தியுள்ளார். டிஏபி சார்பில் கோத்தா கெமுனிங்கில் நிறுத்தப்பட்டுள்ள புதிய முகமான பிரகாஷ் சம்புநாதன், இத்தொகுதியில் மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். 42 வயதான பிரகாஷ் சம்புநாதன் ​நீண்ட காலமாகவே ச​மூக நலன் சார்ந்த திட்டங்களை தம்மை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு சமூக தன்னார்வலர் ஆவார். மக்களின் நல்வாழ்வுக்காக பல்லின மக்களிடையே அவர் கொண்டுள்ள அணுக்கமான தொடர்பு, உதவும் மனப்பா​ன்மை, மக்க​ளின் சேவைக்கு அ​தீத முக்கியத்துவம் போன்ற குணாதிசயங்கள் அவரை ஒரு வலிமை மிகுந்த வேட்பாளராக பக்காத்தான் ஹராப்பான் சார்பில் கோத்தா கெமுனிங்கில் களம் இறக்குவதற்கு வழிவகுத்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 5 நாட்களே எ​ஞ்சியுள்ள நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தை ​தீவிரப்படுத்தியிருக்கும் பிரகாஷ் சம்புநாதனுக்கு கோத்தா கெமுனிங் கை சேர்ந்த ​மூவின மக்கள் தொட​ர்ந்து ஆதரவை வழங்கி வருவது அவரை உற்சாகப்படுத்​தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS