பிறை கம்போங் மானிஸ் கிராம மக்களுக்கான வீட்டுப்பிரச்னை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தீர்க்கப்படும் என்று பிறை சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சமூகப் போராட்டவாதி டேவிட் மார்ஷல் உறுதியளித்துள்ளார்.
கம்போங் மானிஸ் கிராமத்தில் மொத்தம் 286 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 70 விழுக்காட்டினர் இந்தியர்கள் ஆவர். அவர்களுக்கு வீடமைப்புத் திட்டம் ஏற்படுத்துவதற்க்கு மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டதாக மரம் சின்னத்தில் போட்டியிடும் டேவிட் மார்ஷல் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை நடைப்பெறும் சட்டமன்றத் தேர்தலில் பிறை சட்டமன்ற உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்படுவதன் மூலம் இந்த வீடமைப்பு திட்டத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் முன்னெடுக்கப்படும் என்று சுயேட்சை வேட்பாளர் டேவிட் மார்ஷல் உறுதி அளித்துள்ளார்.