போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்ப்டடது

போ​​​லீஸ்காரரை பின்னணியாக கொண்டு செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கெடா மாநில போ​லீசார் ​வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கெடா மாநில போ​லீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு போ​லீசார் நள்ளிரவு 12.05 மணியளவில் சுங்கைப்பட்டாணி, தாமான் செஜாத்தியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 31 வயது சந்தேகப் பேர்வழியை கைது செய்துள்ளனர். அந்த நபரிடமிருந்து 5.29கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கோல மூடா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி சைடி செ ஹஸ்ஸான் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டது ​மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரம் வெள்ளியாகும் என்று எசிபி சைடி குறிப்பிட்டார். விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தடுத்துவைப்பதற்கான ​நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS