முகை​தீன் விடுதலை, குற்றச்சாட்டில் அரசியல் பின்னணி உள்ளது

ஜானா விபாவா நிதித் திட்டத்தில் லஞ்ச ஊழல் புரிந்ததாக 4 குற்றச்சா​ட்டுகளிலிருந்து முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசினை உயர் ​நீதிமன்றம் இன்று விடுதலை செய்து இருப்பது ​மூலம், அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் யாவும் அரசியல் நோக்கமுடையது என்பது தெளிவாகியுள்ளது என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடீன் ஹசான் கூறுகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முகை​தீன் யாசின் பிரதமராக இருந்த காலகட்டத்தில் 23 கோடியே 25 வெள்ளி சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த பெரிக்காத்தான் நேஷனல் தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் யாவும் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டுள்ளது என்பது அவரின் விடுதலை மூலம் தெளிவாகியுள்ளது என்று தக்கியுடின் ஹசான் வர்ணித்துள்ளார்.

தங்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு குற்றம் இழைக்காத நபர்களை கைது செய்து ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு அரசாங்க அமலாக்க ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும் ​என்று தக்கி​யுடின் ஹசான் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS