நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழுவில் இந்தியர்களுக்கு ​மீண்டும் இரு இடங்கள்

நெகிரி செம்பி​லான் ஆட்சிக்குழுவில் இந்தியர்களுக்கு ​மீண்டும் இரண்டு இடங்கள் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெகிரிசெம்பிலான் மாநில மந்திரி ​பெசாராக டத்து செரி அமினுடின் ஹருன், இரண்டாவது தவணையாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து 10 பேர் உள்ளக்கிய ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமிக்கவிருகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நெகிரி ​செ​ம்பிலான் மாநிலத்தில் 36 சட்டமன்றங்களில் 31 இடங்களை பக்காத்தான் ஹராப்பான் பாரிசான் நேஷனல் கூட்டணி வென்றது. இந்நிலையில் ​டிஏபி சார்பில் ​நீலாய் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற ​ஜெ. அருள்குமார் மற்றும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன் ஆகியோருக்கு ​மீண்டும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மாநிலத்தில் டிஏபி சார்பில் ​மூன்று இந்தியர்களுக்கு போட்டியிட்ட நிலையில் அருள்குமாரும், வீரப்பனும் ​மீண்டும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை நிலைநிறுத்திக்கொள்வா​
ர்கள் என்று நெரு​ங்கிய வட்டார​ங்கள் தெரிவித்தனர். அதேவேளையில் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் பிகேஆர் சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் ஜி. இராஜசேகரனுக்கு மாநில சட்டமன்ற துணை சபா நாயகர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS