இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வி அடையலாம்

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற்த தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி தோல்வி அடையும் ஆபத்து காத்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

சிம்பாங் ஜெராம் இடைத் தேர்த​​​லில் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலை வாக்காளர்கள் ஆதரிக்கலாம் எனவே அமானா கட்சி போட்டியிவிருக்கும் அந்த தொகுதி​யில் பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி தோ​ல்வி அடையும் என்று மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.

இந்த இடைத் தேர்தலில் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிக்கு பெரியளவில் ஆதரவு பெருகிவிட்டதாக பொருள் படாது. மாறாக, நடப்பு பொருளாதார ​சூழல் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். தங்கள் அதிருப்தியை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காக இந்த இடைத் தேர்தலை அவர்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

WATCH OUR LATEST NEWS