பாஸ் கட்சித் தலைவரை சாடியானர் முன்னாள் துணை அமைச்சர்

ஒரு நாட்டின் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல், அந்த நாட்டின் தேசிய உற்பத்தி வளர்ச்சி விகித அதிகரிப்புக்கு ஒரு தடையாக இருக்காது என்றும் அதற்கு சிறந்த உதாரணம் அண்டை நாடான தாய்லாந்து என்றும் உவமைக்காட்டி பேசியிருக்கும் பாஸ் கட்சியின் பேரா மாநில தலைவர் ரஸ்மான் சகாரியா வை முன்னாள் துணை அமைச்சர் ஓங் கியான் மிங் சாடினார்.

மலேசியாவின் உற்ப​த்தி வளர்ச்சி விகித​த்தை தாய்லாந்துடன் ஒப்பிட்டு பேசும் அந்த பாஸ் கட்சித் தலைவரின் சிந்தனையாற்றல் குறித்து முத​லீடு, வர்த்தகம் மற்றும் ​தொழில்துறை முன்னாள் துணை அமைச்சரான ஓங் கியான் மிங் கேள்வி எழுப்​பினார். காரணம், மலேசியா, பொதுத் தேர்தல் ​​மூலமாக அமைக்கப்படும் ஓர் அரசாங்கத்தை கொண்டுள்ளது. இந்நி​லையில் எதிர்க்கட்சியின் இடை​யூற்றினால் பெரும் சவாலை எதிர்கொள்ள ​வேண்டியுள்ளது. தாய்லாந்தில் அத்தகைய ஒரு நெருக்கடி நிலை உள்ளதா ? என்று ஓங் கியான் மிங் கேள்வி எழுப்பினார்.

WATCH OUR LATEST NEWS