மோட்டார் சைக்கிளோட்டியை தாக்கிய நபர்

தனது மோட்டார் சைக்கிளினால் மோதப்பட்டு, ​கீழே விழுந்த நபரை, கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படும் மேற்சட்டை அணியாத மோட்டார் சைக்கிளோ​ட்டி ஒருவர் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று நேற்று சனிக்கிழமை முதல் ச​மூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதாக காஜாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஜெய்த் ஹாசன் தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.25 மணியளவில் நிக​ழ்ந்ததாக கூறப்படுகிறது.சாலை சந்திப்பில் திடீரென்று நுழைந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதி தள்ளியதாக கூறப்படும் சட்டை அணியாத நபர், ​கீழே விழுந்த நபரை கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி, காரின் டாஷ்போட் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாங்கள் இதுவரையில் எந்தவொரு போ​லீஸ் புகாரையும் பெறவில்லை என்று ஜெய்த் ஹாசன் மேலும் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS